வழக்கம் போல்
நகர் உலாச் சென்ற
கடவுள்
தெரியாத்தனமாக
ஒரு வேசியின்
வீட்டுக் கதவைத்
தட்டிவிட்டார்
ஏதுமறியாத வேசிக்கு
வந்திருப்பது கடவுளென்று
தெரியாவிட்டாலும்
யாவுமறிந்த கடவுளுக்கு
அவள் வேசியென்பது
தெரிந்துவிட்டது
உள்ளே வாருங்கள்
என்றாள் வேசி.
கடவுள் தயங்கினார்
–
இல்லை, நான் அதற்காக
வரவில்லை.
வேசி சிரித்தாள்
-
நேற்றுந்தான் ஒருவன்
கவிஞன் நான்
கவிதை எழுதத்தான்
வந்தேன்
என்று சொல்லிக்கொண்டு
காகிதம் பேனாவோடு
வந்தான்
காகிதத்தில் ஒரு
வரியும் எழுதவில்லை
காலையில் தான்
போனான் என்றாள்.
கடவுள் திக்கினார்
-
நான் அப்.....
அதற்கு மேல்
கடவுளைப் பேசவிடவில்லை
வேசி.
ஆட்கொல்லி ஆண்டவன்
ஆட்கொள்வதற்கு
வேசிகள் ஒன்றும்
விலக்கல்லவே.
விலக்கல்லவே.
சூத்திரனின்
பிறப்பை
வேதங்கள் அறிவித்தன,
பிரபஞ்சம் கொண்டாடியது(seyonyazhvaendhan@gmail.com)