இன்னுமா என்னை
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
ஆச்சரியமாய் அவள்
கேட்டது
அதிர்ச்சியாக இருந்தது.
மறந்துவிடாதே என்று
விடைபெறும் போது
நீ தானே சொன்னாய்
நூறு முறை என்றேன்.
அப்படியா சொன்னேன்
என்று
ஐயத்தோடு கேட்டாள்.
நன்றாக யோசித்துப்
பார்த்தேன் –
மறந்து விடாதே
என்றுதான் சொன்னாள்.
மறக்க மாட்டேன்
என்று சொல்லவேயில்லை.
-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக